தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!
Monday, November 27th, 2017
இந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்தது. அதில் நானும் ஒரு சுதந்திர போராட்டத்தையே வழி நடத்தி சென்றவன்.
சனத்தொகையில் சரி பாதி மக்கள் அடுப்பங்கரையில் வாழும் வரை விடுதலை என்பது சாத்தியமில்லை என்று பெண்கள் சமூகத்தை நோக்கி எமது போராட்ட வரலாற்றின் ஆரம்பத்திலேயே முதன் முதலில் அறை கூவல் விடுத்தவர்கள் நாங்கள் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
ஆண்களுக்கு நிகராக பெண்களையும் தமது உரிமைக்காகாக போராட்டக்களத்தில் முதன் முதலில் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் நாங்கள்.
அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம் என்று உறுதி கொண்டு எமது பெண்கள் சமூகம் எழுந்து வந்தது வெறும் தேச விடுதலைக்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைக்காகவுமே அவர்கள் எழுச்சியுற்று வந்தார்கள். ஆனாலும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் எமது போராட்டத்தின் வழிமுறையை மாற்றிக்கொண்டவர்கள் நாங்கள். காலம் மாறலாம் சூழல் மாறலாம் அதற்கு இசைவாக போராட்ட வடிவங்களும் மாறலாம்.
ஆனாலும். அன்று நாம் கனவு கண்ட பெண்கள் சமூகத்தின் இலட்சிய நோக்கு இன்னும் மாறவில்லை. தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை. அரசியல் அதிகாரங்களை பெறுவதன் ஊடாக ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும்… பெண்கள் சமூகத்தின் உரிமைகளை பெற்றுவிட முடியும் எம்றும்.. நம்பிக்கை கொண்டு எமது உரிமை நோக்கிய பயணத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம்.
பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். அவர்களுக்கான சமூக ஒடுக்குமுறைகள் உடைக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமவுரிமை காணப்பட வேண்டும். பெண்கள் சமூகம் சுமக்கும் குடும்ப சுமைகளில் இருந்து விடுபட வேண்டும்.
தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு 25 வீதத்திற்கு அப்பால் சென்று ஐம்பதிற்கு ஐம்பது வீதம் பெண்களின் உறுப்புரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரம் வளம்பெற வேண்டும்.
அந்த வகையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்கள் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அவரது அமைச்சுக்கு மேலே குறிப்பிட்டுள்ள வாழ்வாதார உதவிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்காதவிடத்தும்; இதற்கான திட்டங்களை வகுத்தும் அதே நேரம் ஆற்றுப்படுத்துகை சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் சமூக வழிகாட்டல்களை மேற்படி பெண்கள் மத்தியில் ஏற்படுத்தல் போன்ற திட்டங்களை வகுத்தும் அதற்கான நிதி மூலங்களைப் பெற்றும் எமது மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதே நேரம் அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதில் மேற்படி அமைச்சுக்கு உதவ வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106