தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி – இராணுவ தளபதி அறிவிப்பு!
Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
உணவு, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தாங்கிய விநியோக வண்டிகள் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் மூன்றாம் அலை தொடர்பில் சுகாதார தரப்பினர் உன்னிப்பதாக வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய தினம் காலை வரையில் 13 மாவட்டங்களில் 90 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய குழு!
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின்...
|
|
|


