மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, November 18th, 2021

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயமுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே மற்றும் பணிப்பாளர் நாயகம்  சர்தா வீரகோன் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சில வீதிகள் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் இவ்வாறு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாக  உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி  அதிகாரசபை அதிகாரிகள் கட்டிட ஆய்வு நிறுவன நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த வீதிகள் தொடர்பாக  ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

2011 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸாருக்கு யாழ். மேல் நீதிமன...
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வரிச்சலுகை வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம்!
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை - பிரதமர் ரணில் தெ...

அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர் - மக்களை நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரச அதிகாரிக...
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால் நாடு ம...
அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் - ஆட்பதிவு திணைக்களம் அறிவ...