தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது – பொலிஸார் தகவல்!
Monday, April 26th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களுள் 134 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் கொழும்பில் 34 பேர், கம்பஹாவில் 45 மற்றும் களுத்துறையில் 50 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3470 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் கிடைக்கவில்லை -மக்கள் விசனம்!
ஆறு மணிநேரம் செயல் இழப்பிற்கு பின்னர் வழமைக்கு திரும்பின!
95 ஒக்டென் பெற்றோல் நாளைமுதல் விநியோகிக்கப்படும் - வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!
|
|
|


