தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு – சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!
Sunday, April 25th, 2021
மீள் ஏற்றுமதிக்காக சுங்கப்பிரிவினால் பொறுப்பேற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களில் ஒரு நிறுவனத்தினது தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றைய நிறுவனத்தினது தேங்காய் எண்ணெய் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
கவனயீனமாக பஸ்களை செலுத்தும் சாரதிகளுக்கு 25000 ரூபா அபராதம் !
பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுட்டிக்கா...
கொள்கலன் அனுமதி தாமதம் - இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்!
|
|
|


