12 ஆம் திகதி பொது விடுமுறறாயக அறிவிக்கப்பட்டாலும் திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, April 10th, 2021

எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர ஆகிய அலுவலகங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்தள்ள செய்திக் குறிப்பில் –

ஏற்கனவே, குறித்த 12 ஆம் திகதிக்கான நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கான சேவைகள் மாத்திரமே இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களில் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கான நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கான சேவைகள் இடம்பெறும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை சேவை பெறுநர்கள் 011 2 677 877 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பணத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர் - வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்...
பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் தெரிவித்தவர்களின் விபரங்கள் CID க்கு.
இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம் - சுற்றுலா அதிகார சபை அறிவிப்...