தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
Sunday, March 28th, 2021
தொழிற்சங்க இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொழிற்சங்கங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை தொழிலாளர் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த நாட்டில் மொத்த தொழிலாளர்களில் 35 சதவீதமானவர்கள் பெண்களாவர். மற்றைய விடயம் இந்த தொழிற்சங்கங்கள் அரசியலுடன் இணையாமல் சுதந்திரமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாகன எரிபொருள் தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தல்!
காற்று மாசுபாடு அதிகரிப்பு - துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை - சில ஊக்குவிப்பு சலுக...
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை!
|
|
|


