23 இலங்கை மீனவர்கள் கைது!
Saturday, August 6th, 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கடற்படை வலயத்தில் பணியாற்றும் கடற்படை குழுவினரால் சம்பூர் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. குறித்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட 03 படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 03 வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இறக்குமதியாகும் பால்மாவின் விலை ரூ.100 இனால் அதிகரிப்பு?
இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி இலங்கையில்!
ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவட...
|
|
|


