நுகர்வோர் அதிகார சபை விசேட நடவடிக்கை!
Wednesday, March 30th, 2016
வரவுள்ள பண்டிகை காலங்களை முன்னிட்டு நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வரை இந்த சுற்றி வளைப்பினை முன்னெடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
லைக்கா நிறுன விவகாரம்: பத்துக் கோடியோடு நிபந்தனையற்ற மன்னிப்பு!
தரமற்ற ஊசி, சரியான முறையில் சிகிச்சை வழங்காமையே - தங்கை உயிரிழப்பு - யாழ். பல்கலை மாணவியின் சகோதரி க...
சாவால்களைக் கண்டு அஞ்சாது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை கல்வியின் மூலம...
|
|
|


