ஒரேநாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக பதிவு!

Tuesday, September 1st, 2020

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இலங்கையில் 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 32 பேர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த  2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 169 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இலங்கையில் இதுவரையில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 26 ஆயிரத்து 111 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் - இலங்கையி...
கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை -  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை ம...
மூத்த  நிர்வாக  சேவை அதிகாரி அமரர் கந்தசாமி பரமலிங்கத்தின் 31 ஆவது நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்து...