இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் – இலங்கையின் உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
Wednesday, May 8th, 2024
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ( 08 ) அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணயின் இறுதியில், உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் அமர்வு, அதன் தீர்ப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தது.
இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட 2 வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை முன்வைத்திருந்தார்.
டயனா கமகே மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிட்ட ஓசல ஹேரத், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால், டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106