கொரோனாவை தொடர்ந்து சீனாவினை புரட்டி எடுக்கும் கனமழை!
Monday, August 31st, 2020
சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி வருகின்றன.
சீனாவின் மூன்று முக்கிய அணைகள் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் முக்கிய சாலைப்பகுதி ஒன்று மூன்றே நிமிடங்களில் பெரும் வெள்ளக்காடாகியுள்ளது.
கார்கள், கனரக வாகனங்கள் எல்லாம் காற்றடைத்த பலூன்கள் போல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன் யாங்ட்சி நதியின் குருக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதேவேளை 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் மழை வெள்ளத்தால் சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொவிட் 19 தொற்றினை உலகளவில் சீனா பரப்பியிருந்ததாகவும் அவற்றினால் தான் சீனாவுக்கு இந்நிலை என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பலைகள் எழுந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து கோர விபத்து : 24 பேர் பலி - ஈக்குவடாரில் சோகம்!
உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ராணுவ படகை தகர்த்தது ரஷியா – ஏராளமான உக்ரைன் படையினர் பலி என்றும் ராஷ்ய ...
சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!
|
|
|


