சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!

Thursday, September 14th, 2023

சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இலங்கையை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டில் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஸ்பெயின், மலேசியா, மாலைதீவு, பாலி, இந்தோனேஷியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக இலங்கையும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளுக்கு நட்புரீதியான விருந்தோம்பல் மற்றும் சுவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் கடற்கரையின் அழகு மற்றும் பழங்கால இடிபாடுகளை பார்வையிடும் திறனை இலங்கை வழங்குகிறது என்று அந்த இணையதளம் மேலும் குறிப்பிட்டுள்ளது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106