வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் முடிவு!

Tuesday, July 28th, 2020

இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இரண்டு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்களை அழைப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கு முன்னர் எண்ணியிருந்தது.

எனினும் நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக வெளிநாட்டு கண்காணிப்பார்களை அழைப்பதில்லை என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தினை நேற்றையதினத்தில் இருந்து 24 மணி நேரமும் இயங்க வைக்குமாறு மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை சம்பந்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.

Related posts:


சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
ஊழல் மோசடி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அமைச்சரவை அனுமதி - அமைச்சர் உதய கம்மன்பில ...
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து யாழ்.மேல் நீதிம...