பொது சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Saturday, July 18th, 2020

பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிரமமான விடயம் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திள்ளார்.

அத்துடன் கொரோனா அச்சுறுத்தல் இல்லாவிடினும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி தேர்தலை நடத்துவது சவாலானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நேற்று மதியம் முதல் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு எந்தவொரு அதிகாரங்களையும் வழங்க முடியாது என்று சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்தை கண்டித்தே பணி விலகலை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விசேட பயிற்சி பெறும் புலனாய்வு அமைப்புககள் - பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன!
மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது : பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி தீர்மானம் இன்னம...
பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்...