ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை – பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு சாடல்!
Monday, February 22nd, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளுக்கு தியாகிகள் அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் காணப்படுகின்றது என பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு சாடியுளள்ளார்.
அத்துடன் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை என அவர் சுட்டிக்கபட்டியுள்ளார்.
ஜனவரி 2009முதல் மே 2009 முதல்வரை 5000 முதல் 7000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பதற்கான சுயாதீனமாக நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்கள் உள்ளன என்பது உட்பட பல முக்கிய விடயங்களை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் முன்வைக்கும் கட்டுக்கதை போல 40,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்த மிகமோசமான யுத்த குற்றத்தினை மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மோதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் சிறுவர்கள் என யுனிசெவ் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களை படையணியில் இணைப்பது பயிற்சி வழங்குவது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் பிரித்தானியாவில் வாழும் அடேல் பாலசிங்கம் என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு, பிரித்தானியா ஏன் இந்த விவகாரத்தை விசாரணை செய்யுமாறு ஐநாவை கேட்கவில்வை எனவும் கேள்வி எழுப்பவேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106