வெளிவாரி மாணவர்கள் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
Monday, June 22nd, 2020
வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவது என்பது இலகுவான காரியமல்ல. தொழிற்சந்தைக்கு தேவையான விதத்தில் பல்கலைகழகங்களிலிருந்து படித்தவர்கள் உருவாவதும் இல்லை.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காக புதிய கல்விக் கொள்கைக்கு அமைய இலட்ரோனிக் தொழில்நுட்பம் உட்பட தொழில்நுட்ப பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் இணையுங்கள் - ஜனாதிபதி அழைப்பு!
துருக்கியில் பேரழிவு - 3500 தாண்டியது உயிர் பலி - எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கை!
வருடாந்தம் 800 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்கின்றது - சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற ம...
|
|
|


