இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !

Thursday, May 7th, 2020

இந்தோனேஷியாவிற்கு அருகில் உள்ள ஆழ்கடலில் நேற்றுஇரவு பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நில அதிர்வு 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வினால் சுனாமி ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் என இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts: