சாவகச்சேரியிலும் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
Monday, July 25th, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர்களும் இன்று (25), 3 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அச்சுவேலி வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியுமே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைகலப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்த ஒருவரை, அச்சுவேலி வைத்தியசாலைக்கு கடந்த 23ஆம் திகதி சிகிச்சைக்கு கொண்டு சென்றவர்கள், வைத்தியசாலையில் நின்றவர்களுடன் முரண்பட்டு, அங்கு கடமையாற்றும் சிற்றூழியரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
பேருந்து -முச்சக்கரவண்டி விபத்து – பேருந்து தீக்கிரை!
வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!
பொலிசார் மீது நம்பிக்கை இல்லை - இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் - பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்...
|
|
|


