ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்து!
Tuesday, March 30th, 2021
அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் அரசியல் நோக்கத்தினை விட்டுவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து விடுபட சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சார்க் அமைப்பின் பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு
வடக்கில் கால்நடைகள் வளர்ப்பு தொடர்பில் அதிக அக்கறை தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் - சுகாதார அமைச்சு வேண்டுகோள்!
|
|
|


