வெளிநாடுகளில் இருக்கும் 17 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு!
Sunday, March 29th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்தவேண்டுகோளை அடுத்து இதுவரை 17 ஆயிரம் பேர் தம்மை பதிவுசெய்து கொண்டனர்.
இதில் 6773 பேர் மத்திய கிழக்கில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்து 1892 பேரும், தென்னாசியாவில் இருந்த 1028 பேரும், வட அமெரிக்க மற்றும் ஏனைய நாடுகளில் இருந்த 6000 பேரும் தன்மை பதிவு செய்துகொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தரவுகளை கொண்டு எதிர்காலத்தில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது - வர்த்தக அம...
போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் – சஜித் வழங்கிய ஏமாற்று வீட்டு திட்டத்திற்கு...
இரு பதாகைகள் தாங்கி வரும் இ.போ.ச பேருந்துகள் - குழப்பத்தில் பயணிகள்!
|
|
|


