தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் – மக்கள் முண்டியடிப்பு!
Monday, October 25th, 2021
மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் இன்றமுதல் மீள ஆரம்பித்துள்ளன. இதற்கமைய 133 தொடருந்து சேவைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் இன்றுமுதல் தொடருந்துகளில் பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பருவச் சீட்டுத் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகத் தொடருந்து நிலையங்களில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் என்பன முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு!
எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை!
கொரோனா தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 5 ஆயிரத்து 500 பேருக்கும் தொற்றுறுதி என சுகாதார ...
|
|
|


