கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Wednesday, March 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது.
ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவிற்கு வெளியே இத்தாலியில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டமைப்பின் செயற்பாடுகளால் தமிழ்மக்களின் ஒட்டமொத்த அடையாளங்களையும் அழிக்கப்படுகின்றது - எச்சரிக்கி...
மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!
அரச சேவை தொழில் திணைக்கள அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க போராட்டம்!
|
|
|


