ஒரு மாதத்திற்கு நீடிக்கவுள்ள மின்சார விநியோகத் தடை !
Tuesday, March 26th, 2019
தற்போது நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக நான்கு மணித்தியால மின்சார விநியோகம் தடைபடுவதாக அறிவிக்கப்பட்டது.
காலை 8.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை அல்லது 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதுடன், மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அல்லது 7.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை அல்லது 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெருங்கிய நண்பரொருவரை இழந்துவிட்டோம் – பிடல் கஸ்ட்ரோவின் மறைவு குறித்து ஜனாதிபதி!
கொரோனாவின் தாண்டவம் – உயிர்ப்பலி 11 ஆயிரத்தை தாண்டியது!
இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் - தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு!
|
|
|


