ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்!
Monday, October 21st, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது.
எனினும் தற்போது தேர்தல் ஆணைக்குழு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது. 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிளாஸ்ரிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினங்களை தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
Related posts:
புகையிரத திணைக்களங்களுக்கு சொந்தமான நிலங்கள் விவசாய செய்கைக்காக குத்தகைக்கு விடப்படும் - ஜனாதிபதி ஊட...
புதிய பொருளாதார மாற்றத்திற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் -...
யானை, மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்த யாழ்ப்பாணத்தில் கையொப்பம்!
|
|
|


