நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் சுரண்டல்களுக்கு இடமளிக்கப்படாது – கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை !
Sunday, December 10th, 2023
கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், கோழி இறைச்சியின் விலை மேலும் மேலும் உயர்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு இலக்காக மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது நாட்டில் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் துரிதகதியில் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கூறப்பட்ட கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நலன்புரி முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு 971 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
மக்களை அலையவிடுபவர்களாக அதிகரிகள் செயற்படவே கூடாது - யாழ்ப்பாண மாவட்டச் செயலர் அறிவுரை!
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்- வெளியானது நேர விபரம்!
|
|
|


