பிரபல பாடசாலை முறைமை நிறுத்தப்படுகின்றது?
Tuesday, July 19th, 2016
நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் சிறந்த பாடசாலைகளை ஸ்தாபிக்க வேண்டும் என பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரபல பாடசாலை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புளத்சிங்கள ஏகல்ஓய, வாராந்த சந்தை மற்றும் பொருளாதார நிலையத்தை நிர்மாணிப்பதற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அரச பல்லைக்கழகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை போன்ற நம்பிக்கையை பெற அந்த நிறுவனம் தவறியுள்ளது.
மேலும் தனியார் பாடசாலைகளில் தேசிய பாடநெறிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை- தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரி...
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்!
மருதனார்மடம் பகுதி கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபரின் சடலம்!
|
|
|


