கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்!
Tuesday, May 23rd, 2023
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நேற்று(22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டெர்மினல்களை நிர்மாணிப்பதால் மட்டும் துறைமுகம் உருவாகாது என குறிப்பிட்டார்.
கிழக்கு முனையத்தின் முதல் கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏனைய தனியார் டெர்மினல்களுடன் போட்டியிட்டு அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என நம்புவதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!
ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு - 205 மில்லியன் ரூபா நஷ்டம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...
இலங்கையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஆய்வை சினோபெக் ஜூன் மாதம் முடிக்க உள்ளத...
|
|
|


