மதுபோதையில் சாரத்தியம்: 7802 சாரதிகள் கைது – பொலிஸ் தலைமையகம்!
Saturday, August 10th, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 7802 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரத்து?
காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு மேலும் 6 மாதகால விசேட சலுகை - மோட்டார வாகன போக்குவரத்து த...
பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு – பரீட்சை திணைக்களம் அறிவிப...
|
|
|


