இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இரத்து?
Sunday, May 6th, 2018
2018 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என சுவீடன் நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.
இந்தக் குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவரின் கணவர் மீது பாலியல் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதனை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த புகார் காரணமாக தம் மீதான நம்பிக்கையினை மக்கள் இழந்துள்ளதாக சுவீடன் நோபல் பரிசு குழுவினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக 1940 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் வரையிலான காலப்பகுதியில் நோபல் பரிசு வழங்கப்படாமல் இருந்தது. அதற்கு பின்னர் இந்தஆண்டில் நோபல் பரிசு விருது வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்!
பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ள...
கடந்த 24 மணி நேரத்தில் 686 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
|
|
|


