காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு மேலும் 6 மாதகால விசேட சலுகை – மோட்டார வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம்!

Monday, May 10th, 2021

அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதிமுதல் எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே அலஹகோன் இக்காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை அவை காலாவதியான திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹேர காரியாலங்களின் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில், குறித்த காரியாலங்களில் தொலைபேசியின் ஊடாக முன்கூட்டிய நேரத்தை ஒதுக்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ள மோட்டார வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சீ.கே அலஹகோன் மூடப்பட்டுள்ள காரியாலங்களை மீள திறப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

மக்களை மறந்தமையினால்தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டது - அக்கட்சியின் முன்னாள் நாடாளும...
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை - அமைச்சர் பந்து...
மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் - நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூட...