குடும்ப சண்டை – கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட அம்மம்மா !
Thursday, August 8th, 2019
வடமராட்சி கிழக்கில் தனது பேரனின் தாக்குதலில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். அண்ணன், தம்பிக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சமயத்திலேயே அம்மம்மா உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் சுப்ரமணியம் கங்கேஸ்வரி (72) என்பவரே உயிரிழந்தார்.
நேற்றிரவு சகோதரர்களிற்கிடையில் மோதல் ஏற்பட்டது. மூத்த சகோதரனை கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்றான்.
அதை தடுக்க முயன்ற அம்மம்மாவின் நெஞ்சில் கத்தி பாய்ந்தது. காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வழியில் உயிரிழந்துள்ளார். 16 வயது சுபாஸ் சஷிகரன் என்பவரே கத்தியால் குத்தினார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் முதலாம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் !
விவசாயிகளிடம் இருந்து பூசணிக்காயை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!
ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர்!
|
|
|
மாத இறுதி வரை நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள்- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்...
செயலாளர் பதவிகளில் பிரச்சினை - 2 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழு!
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் - மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவ...


