இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் – மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில்!
Sunday, January 5th, 2025
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அ...
அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்...
இலங்கை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பெல்ஜியம் அரசாங்கம் இணக்கம்...
|
|
|


