தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!
Wednesday, June 19th, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு இடம் இருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் சரியான தருணத்தில் இது குறித்த தனது முடிவினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவ்வித நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்த மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பேன் என கூறிவந்தார்.
இந்நிலையில் அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு குறித்தே அவரது இந்த கருத்து வெளிப்படுத்துகின்றது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனாவிற்கும் இடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவால் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானிய...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு திகதியை அறிவித்தது தேர்தல் ஆணைக் குழு!
|
|
|


