நெற்பயிருக்கு அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவி – விவசாயிகள் கவலை!

Wednesday, June 19th, 2019

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் திணையன் குருவியின் தாக்கத்தினால் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளையினை சேர்ந்த களிக்காடு, காஞ்சுரமோட்டை, புளியங்குளம் போன்ற பகுதிகளை சேர்ந்த 75 ஏக்கருக்கும் அதிமான விவசாய நிலங்களில் இந்த ஆண்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும் அறுவடைக்கு குறுகிய காலம் காணப்படுவதால் தற்போது நெற்பயிருக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தும் திணையன் குருவியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் விவசாய செய்கையில் முழுமையான பயனை அடையமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கடந்த காலங்களில் இவ்வாறு திணையன்களின் தாக்கம் இல்லை என்றும் இந்த ஆண்டு என்றுமில்லாதவாறு திணையன் குருவிகள் வயல் நெல்லினை அழித்து வருகின்றன.

இதனை யாரிடம் சொல்வது எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related posts:


ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் நிலைக்கு அரசு வங்குரோத்து அடையவில்லை - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு - எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் - நாடாளும...
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிக்க தீர்மானம்!