தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் !

Monday, April 15th, 2019

தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
27 ஒளடதங்களின் விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் இந்த வர்த்தமானியை வெளியிட எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
48 ஒளடதங்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தன இவற்றுள் புற்று நோய் நிவாரண ஒளடதமும் உள்ளடங்குகின்றது.
இந்த நிலையில் சந்தையில் குறித்த ஒளடதங்களின் விலைகள் தொடர்பான மதிப்பீடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: