உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல் அமைப்பு கவலை!
Thursday, April 13th, 2023
நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது.
தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் குறித்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது.தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கம் எந்த தயாரும் இல்லாத நிலையே காணக்கூடியதாக இருக்கிறது.
அத்துடன் நாட்டின் தேர்தல் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது.
அதனால் நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது நிச்சயமற்ற நிலை இருப்பதாகவே கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது எமக்கு தெரிகிறது.
ஏனெனில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற இருக்கிறது. அதற்காக ஆகஸ்ட், பெப்டம்பர் மாதமாகும் போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன.
அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலையே எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106