கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கை!

Saturday, February 29th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் மாத்திரம் 210 பேர் பலியாகியுள்ள நிலையிலேயே உலக சுகாதார மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் இந்த தொற்றினால் 2500க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அத்துடன் புதிதாக பலர் இந்த தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்தினால் சர்வதேச நாடுகளில் பங்கு சந்தைகளில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள் நேற்று அங்கொட தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:

இலங்கையில் ஒரு கோடியே 18 இலட்சத்து 241 பேருக்கு தடுப்பூசி பெற்றுள்ளனர் - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப...
அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டமாக கிளிநொச்சி - மாவட்ட அரச அதிபர் தெரிவ...
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் சென்று பேச தீர்மா...