பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!
Saturday, March 2nd, 2019
ஈரான் நாட்டு தலைநகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த பேருந்து, கெர்மான் நகரின் மத்திய பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என உண்மையை மறைத்தோம் -அப்பல்லோ தலைவர் அதிரடி!
24 பேர் சுட்டுக் கொலை : இந்தோனேசியாவில் பதற்றம்!
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு - கோழி முட்டையின் விலையில் மாற்றம் - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்...
|
|
|


