கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மூவர் கைது!
Saturday, May 5th, 2018
ஐந்து கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் விமான நிலைய கழிப்பறைக்குள் வைத்து தங்கத்தை கைமாற்ற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இந்திய பிரஜைகள் இருவருமேயாகும். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றின் வீரியம் சடுதியாக உயர்வு: கடந்த மூன்று நாட்களில் 100 பேருக்கும் அதிகமானோர்...
இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் சந்தித்து கலந்த...
வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
|
|
|


