வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்!
யாழ். வேம்படிப் பாடசாலைக்கு முன்பாக உள்ள 1 ஆம் குறுக்குத்தெரு வீதி 20 ஆம் திகதி முதல் ஒரு வழிப்பாதையாகவுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் பாடசாலை முடியும் நேரம் நண்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் இவ் வீதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் இப்பாதையானது ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.
மேற்படி நேரங்களில் பிரதான வீதியால் வரும் வாகனங்கள் யாழ் வேம்படிப் பாடசாலைக்கு முன்பாகவுள்ள 1 ஆம் குறுக்கு வீதியூடாக பயணித்து ஆஸ்பத்திரி வீதியினை சென்றடையும். சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி வீதி, சப்பல் வீதி ஆகிய வீதிகளினூடாக வரும் வாகனங்கள் ஆஸ்பத்திரி வீதியினை நோக்கி மாத்திரம் பயணிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். கொக்குவிலில் பட்டப்பகலில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு
தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பில் வழிகாட்டல்!
தகவல்களை மறைத்தால் 6 மாதம் சிறை – பொலிஸார்!
|
|
|


