கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு!
Saturday, February 2nd, 2019
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைகள் ஆரம்பித்துள்ளன. தனியார் தற்போது நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். அதனால் நேற்று தொடக்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினர் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளனர்.
ஒரு விவசாயிடமிருந்து 2 ஆயிரம் கிலோக்கிராம் நெல் கொள்வனவு செய்யப்படும். நாடு 38 ரூபாவுக்கும் சம்பா 41 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதற்கான படிவங்களை களஞ்சியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென்று நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை ...
யாழில் டெங்கு காய்ச்சல் தீவிரம்!
சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் அஷோக சிறிவர்தனவிடம் வாக்குமூலம்!
|
|
|


