நாட்டில் குளிரான காலநிலை தொடரும்!
Friday, January 25th, 2019
நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படுமென தெரிவித்துள்ள அந்தத் திணைக்களம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாள்களாக காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது. சில பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளில் கடும் பனியுடன் கூடிய காலநிலையே தொடர்ந்தும் நீடிக்கின்றது.
Related posts:
சிரியாவில் நச்சுவாயுத் தாக்குதலால் பலர் பாதிப்பு!
சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று : மேலும் 25 பேரின் நிலைமை குறித்து ஆராய்வு – காலவரை...
இலங்கை பெற்ற கடனை திரும்பச் செலுத்த மேலும் ஒரு வருடத்தை நீடித்தது பங்களாதேஷ்!
|
|
|


