விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்!
Thursday, January 10th, 2019
நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும்(10) நாளையும்(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 சுகாதாரப் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தற்போது நிலவுகின்ற காலநிலையில் டெங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளமையினால் இந்த விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறினார்.
Related posts:
இ.போ.சபை ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!
பொதியை பெற வந்தவரை மிரட்டிய யாழ் - கொழும்பு தனியார் பேருந்து பொதிகள் சேவைகள் நிறுவனத்தினர் - யாழ்ப...
தோழர் பவானிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கட்சிக்கொடி போத்து இறுதி அஞ்சலி மரியாதை!
|
|
|


