இ.போ.சபை ஊழியர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!

Thursday, June 13th, 2019

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று(13) பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பதவி உயர்வுக்கு இணையான வேதன அதிகரிப்பை வழங்குமாறு கோரி தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts:


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாளை பதவியேற்பு!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு நாடாளுமன்ற பிரதி...
அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நீதிமன்றம் இடை...