வங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்!
Tuesday, January 1st, 2019
கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது.
காலையில் பணிக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள், வங்கியை திறந்த போது வங்கி புகை மண்டலமாக சிறிது நேரம் காட்சியளித்தது.
வங்கியிலிருந்து புகை வருவதனை அவதானித்த அயலில் உள்ள வர்த்தகர்கள் உடனடியாக, அது தொடர்பில் வங்கி ஊழியர்களுக்குத் தகவலை வழங்கினார். உடனடியாக தீ அணைப்பு சேவையின் உதவியும் நாடப்பட்டது.
எனினும் வங்கியில் இருந்த கணனிகள் உள்ளிட்ட பல பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த தீ முதன் முதலாக காசு எண்ணும் இயந்திரத்தில் இருந்தே பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீயிற்கான காரணம் சேதம் தொடர்பில் உடனடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!
இந்திய - இலங்கை இடையே பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு - இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட...
சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


