சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
Thursday, January 2nd, 2025
நாட்டில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 47,244 சிறுநீரக நோயாளர்கள் ஏற்கனவே இதே கொடுப்பனவைப் பெற்று வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விளம்பரங்கள் முற்றிலும் பொய்யானது எனவும், சிறுநீரக கொடுப்பனவு, அஸ்வசும, உர மானியம், மீன்பிடி மானியம் என்பன செலுத்தும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது
000
Related posts:
பிசி படிவம் கிடைக்காதவர்கள் 021 222 5000 ஐ அழையுங்கள் - யாழ். மாவட்டச் செயலர் அறிவிப்பு!
விசாரணைக்குழு அறிக்கை தவறானது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பாராம் ஐங்கரநேசன்
மக்கள் அணிதிரளும் பட்சத்தில் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடிய...
|
|
|


