செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் !
Saturday, November 10th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் நாளை (11.11.2018) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள குறித்த விஷேட கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த யாழ்ப்பாணம், வவுனியா. கிளிநொச்சி, முல்லைத்தீவு. திருகோணமலை, மட்டக்களப்பு. அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...
அரசாங்கத்தின் தீர்மானங்கள் எனது விருப்பத்திற்கு மாறாக அமையாது - அமைச்சர் தேவா நம்பிக்கை!
நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந...
|
|
|


