யாழ் பல்கலைக்கு யாழ் நகரில் புதிய கட்டடம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் திறந்துவைப்பு – பல்கலைக்கழக சமூகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் கௌரவிப்பு!

Friday, May 24th, 2024


…..
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினையேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதியினால் இக்கட்டித் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய நவீன சத்திரசிகிச்சை தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உட்பட பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத் தொகுதி அமைக்கப்படுவதற்கு மாத்திரமன்றி, யாழ் பல்கலைக் கழகத்தின் விஸ்தரிப்பு மற்றும் வினைத்திறனான செயற்பாடு போன்றவற்றிற்கு ஒத்ததுழைப்பினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய வைபவத்தின்போது, யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106