கிளியூரான் விளையாட்டுக் கழகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மைதான ஏற்பாடு !

Thursday, December 24th, 2020

கிளிநொச்சி மாவட்டத்தின் பல சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட கிளியூரான் விளையாட்டுக் கழகம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்த விளையாட்டு மைதானத்தை ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட இந்த விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு மைதானம் இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வந்தது.

இதுகுறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் ஊடாக, ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்தக் கழகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, உடனடியாக அவர்களுக்கான விளையாட்டு மைதானத்துக்கான ஏற்பாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில, மத்திய பொருளாதார சந்தைக்கு அருகிலுள்ள காணியை இந்த விளையாட்டுக்கழகத்துக்கான தற்காலிக மைதானமாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த மைதானத்தை நேற்றையதினம் நேரில் சென்று பார்வையிட்ட தவநாதன், மேற்கொண்டு கிளியூரான் விளையாட்டுக் கழகத்தினரின் உற்சாகமாக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார்.

இதன்போது, ஒருங்கிணைப்புக்குழு மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், ஒருங்கிணைப்புக்குழு உத்தியோகத்தரும், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினருமான வசந்தரூபன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் - பட்டதாரிகள் மத்தியில் டக்...
சக தமிழ் கட்சிகள் மீது விமர்சனம் வைப்பதற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சியல்ல. எனது ஆதங்கமே - டக்ளஸ...
புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...

மலைய மக்களின் உரிமைக்காகவும் நாம் போராடினோம்  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
எமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவா...
தீவகத்தின் கல்வித்தர வீழ்ச்சியை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுடன் விஷேட ...